அத்தியாயம் 3:
அந்தப் பெண்மணியிடம் பேசி முடித்துவிட்டு… சைக்கிளில் இருந்த தனது ஸ்கூல் பேகையும் எடுத்துக் கொண்டவளாக… தன் வீட்டை நோக்கி நடந்தபடி வந்த கண்மணியின் கண்கள் இவர்களை கூர்மையுடன் நோக்கியது… அந்தப் பார்வையில் ஆராய்ச்சிப் பார்வையோ.. இல்லை… இந்த அந்நியர்கள் யார் என்ற சந்தேக முடிச்சோ சிறிதளவு கூட இல்லை….
இயல்பாக ரிஷி மற்றும் விக்கியின் அருகே வந்தவள்…
”அப்பா 5 மணிக்கு மேலதான் இன்னைக்கு வர முடியும்னு நினைக்கிறேன்… அதுவரை வெயிட் பண்ணுவீங்களா…” என்றபோது
அதுவரை கண்மணியையே பார்த்துக் கொண்டிருந்த விக்கி, ரிஷி இருவருக்கும் இப்போது அருகாமையில் தெரிந்த… கண்மணியின் முகத்தில் இருந்த அழகிய பரு அவள் சிறுமி அல்ல… பருவம் எய்திய அழகிய மங்கை என்பதை அழகாக விளக்க… சிறுமி என்று நினைத்ததால் தங்களுக்குள் கலாய்த்தபடி… அவளையே ’ஆ’ வென்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இருவரும் தங்கள் பார்வையினை வேகமாக மாற்றினர்…
அதே நேரம் தாங்கள் வருவது குறித்து… இந்தப் பெண்ணுக்கு தெரிந்திருக்கின்றது…. அதாவது அவளது தந்தை இவளுக்குச் சொல்லியிருக்கின்றார் என்பது இருவருக்கும் புரிய…. அதனால் கண்மணிக்கு பதில் சொல்ல விக்கி வாய் திறக்கப் போக
ஆனால் விக்கி பதில் சொல்ல வருவதற்கு முன்னே.. ரிஷி… கண்மணியிடம்….
”பரவாயில்லை மணி…. நாங்க வெயிட் பண்றோம்…” என்று ஏதோ ஏற்கனவே தெரிந்த பெண் போல பேசி வைக்க… கண்மணியின் ஒரு கண்ணின் புருவம் ஏறி இறங்கி… கண்கள் சுருங்கி விரிய…
அது கோபத்தைக் காட்டியதா இல்லை அலட்சியத்தைக் காட்டியதா என்றே ரிஷிக்கு தெரியவில்லை…
ஆனால் அந்தப் பார்வையின் வீரியம் தாங்காமல்… ரிஷியையும் அறியாமல்… அவன் வாய் ”சாரிங்க…” என்று முணங்கியது ….
அதற்கு மேல் அவளும் பேச வில்லை… தன் பையைச் சுமந்தபடி தன் வீட்டை நோக்கிச் செல்ல
இவன் சொன்ன சாரிங்க என்ற வார்த்தையில்…. விக்கிக்கு முகம் விளக்கெண்ணெய் குடித்தார்ப் போலவே ஆகி விட்டது
‘டேய் அவ நம்ம விட சின்னப் பொண்ணுடா…’ என்று ரிஷியிடம் பல்லைக் கடித்து வார்த்தைகளை துப்ப…
ரிஷியோ…. அவர்களை விட்டு சில அடி தூரம் போயிருந்த கண்மணியைப் பார்த்தபடி….
‘’ஏங்க இவன் என்னமோ உங்களப் பத்தி சொல்றான். என்னனு கேட்டுட்டு போங்க மணீ…” என்று நண்பனை மாட்டி விடுவது போல சொல்ல…
கண்மணிக்கு கேட்காத குரலில் தான் சொன்னான்… ஆனால் நண்பன் முறைக்க… இப்போது
”மணீ… எக்ஸ்கியூஸ்மி மணி அக்கா” என்று ரிஷி சற்று குரல் உயர்த்தி சொல்ல… அதில் விக்கி அவசர அவசரமாக ரிஷியின் வாயை தன் கைகளால் மூட…
“அந்த பயம் இருக்கட்டும் மணி அக்கா மேல” என்று கண் சிமிட்டியபடி தன்னிடம் விளையாடியவனைப் பார்த்து…. விக்கி இன்னும் முறைக்க…… கண்மணியோ இப்போது திரும்பினாள்… எதார்த்தமாகவா… இல்லை ரிஷியின் குரல் இவள் காதில் விழுந்ததா… அவளுக்கே வெளிச்சம்
திரும்பிய கண்மணி…. ரிஷியை பார்க்காமல்…. விக்கியைப் பார்த்து…
‘பசங்க…. ட்யுஷன் படிக்க வருகிற நேரம்….” என்றவள் அடுத்து பேசாமல் பார்த்த பார்வை அவர்களுக்கு சொல்லாமல் உணர்த்தியது…. ரிஷி பாடல் பாடியதை…. அது கூடாது என்பதைத்தான் அவள் மறைமுகமாக உணர்த்தியபடி அதற்கு மேல் பேசாமல் உள்ளே போய்விட…. இங்கு விக்கியின் முறைப்பில் இருந்தான் ரிஷி…
சொல்லப் போனால் ரிஷியிடம் தான் கண்மணி இந்த வார்த்தைகளை சொல்லி இருக்க வேண்டும்.. அவனிடம் தான் சொல்ல வந்தாள்… ஆனால் ரிஷி விக்கியிடம் தன் பார்வையை வைத்திருக்க… விக்கிதான் கண்மணி பார்த்த போது… அவள் பார்வையைச் சந்திக்க… யாருக்குச் சொன்னால் என்ன என்று விக்கியைப் பார்த்து சொல்லி விட்டுப் போய் விட்டாள்…
“டேய் பாட்டு கேட்டது இவன்…. அறிவுரை எனக்கா” என்றிருந்தது விக்கிக்கு… அதை ரிஷியிடம் சொல்லி அவனைத் திட்ட ஆரம்பிக்க
ரிஷியோ
‘விடுடா விடுடா இது அரசியல்ல சகஜமடா…. அதுமட்டுமில்லடா பேர்த்டே பேபி நான்… இதுல ஒரு சின்ன பொண்ணுகிட்ட திட்டு வாங்குன அவப் பெயர் தேவையா… நீயும் என்னைத் திட்டாதடா…” என்று அப்பாவியாகி நண்பனின் தோள் தொட்டு அவனைச் சாந்தப்படுத்த வழக்கம் போல் விக்கி அமைதியாக ஆனான்..
“ஹப்பா.. உன் பிறந்த நாள் அலப்பறைகள என்னால தாங்க முடியலைடா ” என்றபடி விக்கி சலித்துக் கொள்ள
ரிஷியின் பார்வை வட்டத்திலோ,,,, அந்த வீட்டுத் தோட்டத்தில் வேப்ப மரத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சல் இப்போது கண்ணை உறுத்த…
”வாவ்” என்றபடி விக்கியிடம் சுட்டிக்காட்ட…
அதைப் பார்த்த விக்கியிடம் பெரிதாக எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை.... ’முன்ன பின்ன நீ ஊஞ்சலே பார்த்த்தில்லையா’ என்பதைத்தான் அவனின் முகபாவனை காட்டியது
ரிஷியோ அதை அலட்சியப்படுத்தியவனாய்…
‘விக்கி வாடா… அந்த ஊஞ்சல்ல போய் ஆடலாம்…. நமக்கும் நேரம் போகும்’
விக்கி இப்போது முகத்தில் எரிச்சலோடு…
‘ரிஷி… நாம என்ன சின்னப் பிள்ளைகளா ஊஞ்சல்லலாம் போய் விளையாட….’ சொல்லிக் கொண்டே ரிஷியைப் பார்க்க…. அவனோ… விக்கி அங்கிருந்த செடி மரங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறான் என்று நினைத்துவிட்டான் போல…
“நீ இப்படியே பேசிட்டு இரு…. நான் போகிறேன்” என்றவாறு அங்கிருந்து அகன்று…. ஊஞ்சலிருக்கும் இடத்திற்கு வந்தவன்… அதில் ஏறியும் அமர்ந்து ஆடத் துவங்கி இருந்தவன்…
‘ஹேய் விக்கி செமையா இருக்குடா…. வாடா… மிஸ் பண்ணாதடா… அப்புறம் நீதான் ஃபீல் பண்ணுவ”
ரிஷியின் குரலில் உற்சாகம் கரைபுரண்டோட… அந்த உற்சாகம் அவன் குரலில் இன்னும் சத்தத்தை கூட்ட… வீட்டினுள் இருந்த அறையினுள் உடை மாற்றிக் கொண்டிருந்த கண்மணியின் காதுகளிலும் விழ…. அதுவும் வெகு அருகில் விழ…
ஆம் அந்த அறை தோட்டத்தின் புறம் இருந்த அறை… இயல்பாக பெண்ணாக எச்சரிக்கை மணியை அவளுக்கும் அடிக்க… வேகமாக தன் அறையைச் சுற்றி 360 டிகிரி அளவில் வட்டமடித்து ஒரு முறைக்கு இருமுறை நோட்டமிட்டவள்... நிம்மதிப் பெருமூச்சோடு… அவசர அவசரமாக உடையை மாற்றியவள்… பின் அறையில் இருந்த சன்னல் கதவை லேசாகத் திறந்து பார்க்க…
”இந்த மாதிரி சான்ஸ்லாம் கிராமத்தில் தான் கிடைக்கும்… சென்னையில கிடைக்கிறது ரொம்ப ரேர்டா…. கிடைச்சா அனுபவிக்கனும்… ”
அவள் தந்தையைத் தேடி வந்திருந்த இருவரில்…. ஒருவன் ஊஞ்சலில் உலகின் மொத்த சந்தோசத்தையும் முகத்தில் குத்தகை எடுத்துக் கொண்டவனாக ஆடிக் கொண்டிருக்க… இன்னொருவனோ.. அவனை தடுத்தி நிறுத்தப் போராடிக்கொண்டிருக்க… கண்மணிக்கு ஆச்சரியமாக இருந்தது அதில் ஆடிக் கொண்டிருந்த ரிஷியைப் பார்த்து…
கல்லூரியில் படிப்பவனா இவன்… முகமெங்கும் சிரிப்போடு…. குதுகலத்தோடு…. சிறுபிள்ளை போல் ஆடிக் கொண்டிருக்கும் ரிஷியின் கரைபுரண்ட உற்சாகமும்… மகிழ்ச்சியும் கண்மணிக்கு ஆச்சரியத்தை வரவழைத்த்து….
இதே ரிஷி… சிறுவனாக இருந்திருந்தால் இந்த உற்சாகம் அவளுக்கு ஆச்சரியத்தை தந்திருக்காது….. ஆனால் இளைஞனாக இருந்த அவனின் சிரிப்பு ஆச்சரியத்தையே தந்திருந்தது.... அதிலும் சிரிக்கும் போது கன்னத்தில் நன்றாக விழுந்த குழிகள்… கண்மணி தன்னையும் அறியாமல்…. ரிஷியின் சிரிப்பையே அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.. கண்மணி ரிஷி என்ற வாலிபனைப் பார்க்க வில்லை… அந்த வாலிபனின் குழந்தைத் தனமான… சுற்றம் மறந்த அவனின் மலர்ந்த புன்னகை முகம் தான் அவள் மனதை நிறைத்தது…
”இதே போல் தன்னால் ஏன் இருக்க முடியவில்லை...” பதில் தெரிந்த கேள்விதான் ஆனாலும் சிந்தனையில் ஆழ்ந்தாள் கண்மணி.... ஏனோ அறிமுகம் இல்லாத முன்னே பின்னே தெரியாத அந்த இளைஞனின் மேல் பொறாமையாக வர… அதே நேரம்… ச்சேய்.. இது என்ன நினைப்பு… என்று தனக்குள் சொல்லிக் கொண்டவளாக… சில நொடிகளில் தன் நிலை மீண்டவள்… சன்னல் கதவைச் சாத்தியபடி…. தன் வழக்கமான வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள்…
இன்னும் சற்று நேரத்தில் ட்யூசனுக்கு பிள்ளைகள் வந்து விடுவர்.... அதன் பின் இரவு உணவு தயார் செய்ய வேண்டும்.... நாளை நடக்க இருக்கும் தன் வகுப்புத் தேர்வுக்கு படிக்க வேண்டும்... என்று தன்னைப் பற்றிய தன் சிந்தனையை வேறு திசைகளில் வழக்கம் போல் மாற்ற ஆரம்பித்திருந்தாள் கண்மணி…
....
“விக்கி நீயும் வாடா“ என அவனையும் இழுக்க... விக்கி சுற்றும் முற்றும் ஒரு பார்வை பார்த்தபடி தயக்கத்தில் ரிஷியின் அருகில் அமர்ந்தபடி..
“டேய்… ரெண்டு பேரும் உட்கார்ந்தா… அறுந்து விழுந்திராது” என்று பெரும் சந்தேகம் விக்கிக்கி வர
“அதெல்லாம் விழாது… என்னடா பார்க்கிற... சான்ஸ் கிடைச்சா… அதை அனுபவிக்கனும்... ஆராய்ச்சிலாம் பண்ணக் கூடாது வா வா” என்றவன்... தன் நண்பனையும் இழுத்து தன்னோடு அமர வைத்து தன் உற்சாகத்தில் இணைத்தான் ரிஷி....
அப்போது...
அவர்கள் இருவரையும் முறைத்தபடி.... மூச்சிறைத்தபடி நின்று கொண்டிருந்தான் ஒரு சிறுவன்....
விக்கி ரிஷி இருவரும்... ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்ததை நிறுத்தி அவனைப் பார்க்க...
“இன்னைக்கு என் டேர்ன்.... நான் தான் உட்கார வேண்டும்... மணி அக்கா சொல்லி இருக்காங்க... எறங்குங்க.... “ என்று சொல்லியபடியே ஊஞ்சல் முன் வந்தான்
ரிஷியும் விக்கியும்
“இவன் யாருடா.... “ என்ற ரீதியில் பார்த்தபடி இருக்க...
”நம்பலையா.... பாருங்க....” அங்கு ஒரு கிளையில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு அட்டவணையைக் காட்டி....
“பாருங்க ஜனவரி 1 க்கு நேரா ‘ கோபி’னு என் பேர் இருக்கா.... எறங்குங்க” –இன்று அந்த ஊஞ்சலில் ஆடுவது தன் முறை என்கின்ற தெனாவெட்டில்..... அதிகாரமாய்ச் சொன்னான் அந்தச் சிறுவன்...
அவன் சொன்ன தோரணையில்… ஏனோ ரிஷிக்கு அந்தச் சிறுவனை வம்பிழுக்க வேண்டும் போல் இருக்க.... இறங்கப் போன விக்கியையும் தடுத்து நிறுத்தியபடி....
ஊஞ்சலில் மெதுவாக ஆடியபடியே... கோபி என்ற அந்தச் சிறுவனிடம்
“அந்த அட்டைல ஜனவரி 1 க்கு நேரா கோபின்ற பேர் இருக்குதான்... ஆனால் உன் பேருதான் கோபின்னு யாருக்குத் தெரியும்.... போ போ ஐடி ப்ரூஃப் எடுத்துட்டு வா..... இப்போ இடத்தைக் காலி பண்ணு… அதப் பார்த்துட்டு உன்னை ஆட விடறோம்.... அட்டவணை காட்டறாராம்... அட்டவணை” – ரிஷி சிரிப்பை அடக்கியபடி அதட்டலாகச் சொல்ல...
விக்கி ரிஷியைப் பார்த்து அடக்க முடியாமல் சிரித்தபடி இருக்க... ரிஷி கண் சிமிட்டி சிரித்தான் விக்கியைப் பார்த்தான்....
“எப்புடி… நம்ம ஆன்சர்” என்று இருவருமாக ஹைஃபை கொடுத்துக் கொள்ள
சிறுவனோ இப்போது இன்னும் அதிகமாக முறைக்க ஆரம்பித்தான்....
நாக்கைத் துறுத்தியபடி ரிஷி... கொஞ்சம் மிரட்டலான குரலில்
“ஓட்றா.... ஐடி இல்லைனா 18 வயசு வரை வெயிட் பண்ணு.... வோட்டர் ஐடி தருவாங்க... அதக் காட்டிட்டு... அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்புறமா வந்து இந்த ஊஞ்ச்சல்ல ஆடு....” அமர்த்தலாகச் சொல்ல...
“டேய் பாவம்டா.... விட்ருடா.... அந்தக் குழந்தைப் பையன… அவ்வளவு வருசம் தாங்கமாட்டான் டா..… ஆதார் கார்ட் அக்செப்ட் பண்ணிகலாமேடா “ விக்கி தன் பங்குக்கு என அந்தச் சிறுவனை வம்பிழுப்பது போல் பேசிக் கொண்டிருக்க....
அப்போது... அவன் சொன்ன அந்தக் குழந்தைப் பையனோ...
“மணீ அக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்காகாகாகா” என்று கத்த ஆரம்பித்திருக்க.... அவனின் இந்தச் செயலில் திடுக்கிட்டனர் இருவரும்....
அடுத்த நொடி....
“டேய் இருடா… இதுக்கு எதுக்குடா உங்க சொர்ணாக்காவை கூப்பிடுற…” என்று ரிஷி வாய் தவறி சொல்லிவிட
“என்னது எங்க மணி அக்கா உங்களுக்கு சொர்ணாக்காவா” என்று இன்னும் கத்த ஆரம்பிக்க...
அவ்வளவுத்தான்… இருவருக்கு அஸ்திவாரமே ஆடிப் போயி இருக்க… ஊஞ்சலை விட்டு ஒரே தாவலில் இறங்கினர்...
பின் அதே வேகத்தில் ரிஷி… அந்தச் சிறுவனின் வாயைக் கைகளால் மூட... விக்கியோ... அச்சிறுவனை ஒரே அள்ளலில் தூக்கி ஊஞ்சலில் அமர வைத்து.... போதாத குறைக்கு விக்கி ரிஷி இருவருமாய் அவனை ஆட்டி வேறு விட்டுத்தான் வந்தனர்..
“என்ன கோபி... ஏன் இப்படி கத்துற” என்று கேட்டபடி கண்மணி வீட்டை விட்டு வெளியில் வர...
அதற்கு முன்னரே… அச்சிறுவனை சமாதானப்படுத்தி முடித்து விட்டு... தாங்கள் இருவரும் முன்னே நின்றிருந்த இடத்திற்கே வந்து அமர்ந்திருந்தனர் நண்பர்கள் இருவரும்....
கோபியின் கத்தலிலேயே... ஊஞ்சலில் அவனை ஆட விடாமல் இருவரும் விளையாட்டாக வம்பிழுத்திருக்கின்றனர்... என்று புரிந்தது... ஆனால் அடுத்து சத்தம் வராமல் போக மீண்டும் சன்னலில் எட்டிப் பார்க்க… கோபியை ஊஞ்சலில் வைத்து ஆட்டிக் கொண்டிருக்க… புன்னகைதான் வந்தது கண்மணிக்கு… பிரச்சனை தீர்ந்து விட்டதால் மெதுவாகவேதான் கண்மணி வாசலுக்கு வந்தவள்… பேருக்கு கோபியிடம் கேட்டு விட்டு பெரிதாக விசாரிக்காமல் வாசல் பெருக்க ஆயத்தமானாள்
கோபியும் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்த மகிழ்ச்சியில் கண்மணியிடம் இவர்களையப் பற்றி புகார் வைக்கவில்லை...
கண்மணி வீட்டு வாசலுக்கு எதிர்புறமாக இருந்த மரத்தடியைச் சுற்றி அமர்வதற்காக போடப்பட்டிருந்த திண்டில் அமர்ந்திருந்தனர் ரிஷியும் விக்கியும்…
ரிஷி வழக்கம் போல் போனும் கையுமாக அதில் ஐக்கியமாகிவிட.... விக்கியோ அந்த வீட்டைச் சுற்றியுள்ள வெளி வட்டாரத்தை பார்த்தபடி இருந்தான்... அப்போது அவன் பார்வை எதார்த்தமாக கண்மணியின் மேல் விழ...
கண்மணியின் கெட்ட நேரமா இல்லை விக்கியின் கெட்ட நேரமா தெரியவில்லை...
அதே நேரம் குனிந்து பெருக்கப் போன கண்மணி கண்ணில் விழுந்த முடிக்கற்றையை விலக்கியபடி நிமிர... அவளது பார்வையும் விக்கியின் மேல் விழ... அவள் பார்த்த அடுத்த வினாடியே… விக்கி.... அவசரமாகத் தன் தலையைத் திருப்பி வேறு திசையில் தன் பார்வையை மாற்றினான்...
இதுவே ரிஷியாக இருந்திருந்தால்.... கண்மணி பார்த்த வினாடியே சிநேக பாவனையில் புன்னகைத்திருப்பான்.... ஆனால் விக்கியோ பார்வையை வேகமாக விலக்கி விட்டிருக்க.... கண்மணிக்குள் பெண்ணாய் அவள் உள் மனம் விழித்து இரண்டாம் முறை எச்சரிக்கை விட....
அந்நிய ஆடவர்கள் இருவர் இருக்கும் போது குனிந்து வாசல் பெருக்கப் போன தன்னைத் தனக்குள் திட்டியபடி... அதே ஞாபகத்தோடு கையில் வைத்திருந்த துடைப்பத்தோடு அப்படியே இருவரின் அருகிலும் வந்தாள்... இவர்களும் அவளைப் பார்க்க...
“நீங்க அட்ரெஸ் கேட்ட டீக்கடைக்குத்தான் அப்பா வருவார்.... அங்கயே அவர பார்க்கலாம்... அதுனால நீங்க அங்க வெயிட் பண்றதுதான் நல்லது.... இங்க பசங்கல்லாம் ட்யூசன் படிக்க வருகிற டைம்... நீங்க கிளம்பலாம்” என்று அவர்களைக் கிளம்பச் சொல்ல....
ரிஷியோ...
“பரவாயில்ல நாங்க இங்கயே வெயிட் பண்றோம்...” என்று ரிஷி முடிக்கவில்லை....
கண்மணி சொன்ன அடுத்த வினாடியே.. விக்கி அவனை கைப்பற்றி இழுத்தபடி அங்கிருந்து நடக்கத் தொடங்கினான்... உள்ளுக்குள் அவனுக்குள் எரிமலை வெடித்துக் கொண்டிருந்தது.... காரணம்... தன்னைப் பார்த்த அடுத்த நொடி கண்மணி.... அவள் போட்டிருந்த இரவு உடையை சரி செய்த விதம் விக்கிக்குள் பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருந்தது... அது மட்டுமல்லாது அவள் துடைப்பத்தை வேறு கையில் வைத்திருக்க… ஆண் மகனான அவனுக்குள் அது பெரும் அவமானத்தைக் கொண்டு வந்திருக்க
சாதாரணமாகப் பார்த்த பார்வைக்கு... ”ச்சேய்...” தன்னைப் போய் இவ்வளவு கேவலமாக நினைத்து விட்டாளே.... இருக்கும் இடத்திற்கு ஏற்றபடிதானே புத்தியும் இருக்கும் ... என்று பொங்கியபடி வந்து கொண்டிருக்க.... இதை எல்லாம் ரிஷி கவனிக்கவில்லை.....
“ஏண்டா.... அந்தப் பொண்ணு சொன்னவுடனே வான்னு சொல்லி இழுத்துட்டு வந்துட்ட.... நல்லா இருந்துச்சு அந்த இடம்..... “ என்று மொபைலில் கவனம் வைத்தபடியே சொல்ல...
“அப்போ இங்கயே இரு....” என்று அவன் கையை கோபமாக உதறி விட்டு விடு விடுவென்று கண்மணி இல்லத்தை தாண்டிப் போனான்...
கண்மணிக்கும் விக்கியின் கோபம் புரிய… அதற்காக அவள் ஒன்றும் பெரிதும் அலட்டிக் கொள்ளவில்லை…
நண்பன் கையை உதறிய வேகத்தில்தான் அவன் கோபம் உணர்ந்தான் ரிஷி.... வேகமாக.... தன் மொபைலை பாக்கெட்டில்.... போட்டவன்.... விக்கியைப் பிடிக்க வேகமாய் எட்டு வைக்க ஆரம்பித்து... கண்மணி இல்லத்தின் காம்பவுண்ட் சுவரை விட்டு வெளியே வந்தான்...
அங்கோ வெளியில் கும்பலாக 4 பேர் நின்று கொண்டு விக்கியை நிறுத்தி வைத்து ஏதோ கேட்டுக் கொண்டிருந்தனர்…
ரிஷி அருகில் வரும்போது…. விக்கியை அவர்கள் போகச் சொல்லி விட்டு விட…. அந்தக் கூட்டத்தப் பார்த்தபடியே…
“விக்கி” என்று அழைத்தபடி விக்கியின் அருகில் போக… தாங்கள் இப்போது விசாரித்த பையனின் நண்பன் போல என்று அந்தக் கூட்டம் ரிஷியை விசாரிக்காமல் விட்டுவிட…
விக்கியின் அருகில் வந்தான் ரிஷி…. நண்பனின் கோப முகபாவனையில்… சில அடி தூரம் வரை விக்கியிடம் பேசாமல் ரிஷி அமைதியாகவே வந்தான்….
ஆனாலும் கேட்காமல் இருந்தால் பேசாமல் இருந்தால் அவன் ரிஷி இல்லையே… இப்போது தீவிரமான முக பாவத்தோடு…
“யார்டா இவனுங்க” என்று கேட்டான்…
“மஹ்ம்ம்ம்ம்ம்ம்… அந்த சொர்ணாக்காவோட கைதடிங்க…. ” கடுகு போட்டால் வெடித்து விடும் போல… அத்தனை கடுமை அவன் முகத்தில்
ரிஷி ஏனோ இப்போது இந்தப் பேச்சை ரசிக்க வில்லை… கிண்டலாகச் சொல்லும் போது ரசித்த மனதுக்கு… கோபமாக சொன்ன போது ரசிக்க மனம் வரவில்லை
“லூசு மாதிரி பேசாதடா…. சும்மா சொர்ணாக்கா அது இதுனு…. சின்னப்பொண்ணப் போய்….” என்றவன்
“அதை விடு என்ன கேட்டாங்க அவங்க… “
விக்கி விளக்கினான்…
“யார் நீங்க…. மணி வீட்ல உங்களுக்கு என்ன வேலைனு” ஒருத்தன் கேட்கிறான்…
இன்னொருத்தன்… “இவனுங்க பிரச்சனை பண்ணி இருந்தால் மணி கால் பண்ணி இருக்கும்டான்றான்.”
இப்போது விக்கி நக்கலாக…
”அப்போ… அவ சொர்ணாக்காதானடா…. நல்லவேளை அவ அப்பா பேரைச் சொன்னவுடனே விட்டானுங்க….. நாம எந்த காம்பெட்டிஷன் மண்ணாங்கட்டிலயும் கலந்துக்க வேண்டாம்….” வெறுப்புடன் வேகநடை போட…
அவனின் மற்ற வார்த்தைகளையும்… அந்த கோபத்தையும் கண்டு கொள்ளாமல் விட்டவன்….
“இந்த காம்பெட்டிஷனுக்காக ரெண்டு வாரமா நம்மள பாடாபடுத்திட்டு இருந்தான்…. இனிமேலாவது நாம ஃப்ரீயா இருக்கலாம்” - ரிஷி உள்ளுக்குள் குதூகலித்தபடி குத்தாட்டம் போட ஆரம்பித்திருக்க….. அதற்கு வேட்டு வைப்பது போல… நடராஜ் எதிரில் வந்து கொண்டிருந்தார்…
டீக்கடையில் இவர்களைப் பற்றி சொன்னவுடனே…. நடராஜ் அங்கிருந்து… உடனே வீட்டிற்கு வர…. இதோ வரும் வழியிலேயே பார்த்துவிட்டார்
விக்கி அவரை முன்னரே சந்தித்திருந்ததால் நடராஜ் விக்கியை அடையாளம் கண்டு கண்டு இன்முகத்தோடு பேச ஆரம்பிக்க…. வேறு வழியின்றி நண்பர்கள் இருவரும் மீண்டும் கண்மணி இல்லம் நோக்கிச் சென்றனர்…….
மூவருமாய்…. வரும்போதே….
நடராஜ் அவர்கள் வீட்டு வாயிலில் நின்று கொண்டிருந்தவர்களைப் பார்த்து…
“என்னங்கப்பா…. இந்தப் பக்கம்….” என்று அந்தக் கும்பலை விசாரித்தபடியே அவர்கள் பதிலைக் கூடக் கேட்காமல் உள்ளே நுழைய… ரிஷியும் விக்கியும்…. ஒருவரை ஒருவர் புரியாத பார்வை பார்த்தபடி நடராஜை பின் தொடர்ந்தனர்…..
கண்மணி… ஒரு நாற்காலி போட்டு முன்னே அமர்திருக்க…. அவள் முன் ஒரு பத்து பதினைந்து சிறுவர் சிறுமிகள் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தனர்…….
மூவரும் வருவதை உணர்ந்து…
தன் தந்தையை… நிமிர்ந்து பார்த்தாள் கண்மணி… இவர்கள் இருவரையும் திரும்பிக்கூட பார்க்க வில்லை…
அவ்வளவுதான் அதன்பிறகு…. தன் வேலையில் மூழ்கிவிட்டாள் கண்மணி….
நடராஜ் அவர்களை வீட்டிற்குள் அழைக்க…
விக்கியோ பாடம் எடுத்துக் கொண்டிருந்த கண்மணியை முறைத்தபடியே வீட்டிற்குள் நுழைய… ரிஷி அவனிடம்…
“விக்கி நீ அந்தப் பொண்ணு மேல கோபமா இருக்கேனு அந்தப் பொண்ணுக்கு தெரியலடா…. நீ முறைக்கிறது கூட மணிக்கு அவுட் ஆஃப் ஃபோகஸ் ஆகிருச்சுடா… அவ முன்னால போய் நின்னு நான் உன் மேல கோபமா இருக்கேன்…. நான் இப்போ.. உன்னை முறைக்கிறேனு…. சொன்னாத்தான் உன் கோபம் புரியும் போல தம்பி… ”
“மணி அக்கா…. விக்கி தம்பி உன் மேல ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப கோபமா இருக்கானு நான் வேணும்னா சொல்லிட்டு வரவா” சந்தடி சாக்கில் வாரியபடியே…. கண்மணியின் வீட்டினுள் நுழைந்தான் ரிஷி…
intha viki payyan overa pantraanpa