I’ve posted 15th EPISODE of கண்மணி... என் கண்ணின் மணி
அத்தியாயம் 15:
அடுத்த சில மணித் தியாலங்களிலேயே… அங்கு மீண்டும் கலகலப்பு வந்திருந்தது… இயல்பாகவே ரிதன்யா,மகிளா மற்றும் ரித்விகா கலாட்டா பேர்வழிகள்… அந்த வயதுக்குரிய துள்ளல்கள் நிறைந்தவர்கள் என்பதால் அவர்களின் தன் இயல்பாக அங்கு கலகலப்பும் கேலி கிண்டலும் அவர்கள் மூவருக்குள்ளும் வழிந்தோட… ரிஷியும் தன் இயல்பு நிலைக்கு மீண்டான்… தன் தங்கைகள் மற்றும் தன் காதலியினால் மீட்டெடுக்கப்பட்டான்
அதுமட்டும் இன்றி… ரிஷியின் அருகில் அதாவது முன் இருக்கையில் இப்போது மகிளா அமர்ந்திருந்தாள்… பின் இருக்கையில் லட்சுமி, ரிதன்யா, ரித்விகா என மாறியும் இருந்தனர்…
லட்சுமி மீண்டும் உறங்கி இருக்க… ரிதன்யா, ரித்விகா விளையாட்டு மும்முரத்தில் இருவருமே மகிளா முன் இருக்கைக்கு வந்திருந்ததை பெரிதாக கண்டுகொள்ளவில்லை...
ஆனால் அருகருகே அமர்ந்திருந்த மகிளா-ரிஷி இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்து அர்த்த புன்னகை புரிந்து கொண்டனர் தங்களுக்குள்ளாக இப்போது…
சென்னையில் இருந்து கிளம்புகையில்…. மகிளா காரில் ஏறி அமர்ந்த போது
ரித்விகா, ரிதன்யா செய்த அலப்பறைகள் இருவருக்கும் ஞாபகத்துக்கு வர… அதில் வந்த அர்த்தப் புன்னகைதான் அது…
”ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் நான் தான் முன் சீட்டில் ரிஷி மாமாவுக்கு பக்கத்தில் உட்காருவேன்” என்று ரித்விகாவை முந்திக் கொண்டு மகிளா காரில் ஏறி அமர்ந்து விட... ரித்விகா தன் அண்ணனிடம் ... முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்...
ரித்விகா எப்போதும் காரின் முன்சீட்டில் முன்னால் அமர்ந்துதான் வருவாள்... இன்று ஏனோ மகிளாவும் அதற்கு போட்டி போட... ரிஷி வழக்கம் போல மகிளாவுக்கு ஆதரவாக… தங்கையை எப்படியோ சமாதானப் படுத்தி… மகிளாவை முன்னால் அமரச் செய்து விட… லட்சுமி… இப்போது ரிஷி-மகிளா இருவரையும் முறைத்தார்….
“அம்மா.. நான் கார் ஓட்டப் போகிறேன்… நீங்க பின்னால இருக்க போறீங்க… இதில் என்னம்மா வந்துறப் போகுது… “ என்று ரிஷி சொல்லி சமாளிக்க… அப்போதும் லட்சுமி சமாதானமடையாமல் இருக்க… மகிளாவின் முகம் முற்றிலும் வாடித்தான் போனது இப்போது…
தன் தோழியின் முகம் வாடுவதைக் கண்டு அதைத் தாங்க முடியாத ரிதன்யா சூழ்நிலையைச் சமாளிக்க… தன் அன்னையிடம்…
“அம்மா… மகி முன்னாலயே உட்காரட்டும்… உன் மருமக பின்னால உட்கார்ந்தா நம்ம உயிருக்குத்தான் உத்திரவாதம் இல்லை பார்த்துக்கங்க…” என்று சாதாராணமாகச் சொன்னாள்தான் ஆனாலும் அதில் தீவிரம் இருக்க….
லட்சுமி…. இப்போது தன் மூத்த மகளை முறைத்தாள்…
காரில் பயணம் கிளம்பும் போது இது என்ன பேச்சு என்று இருந்தது அந்த முறைப்பு… அதிலும் இங்கு வந்த இந்த ஒரு வாரமாகவே அவருக்கு மனதில் நிம்மதி இன்றி உறுத்தலாகவே இருந்து கொண்டிருந்தது…. ரிஷியின் நடவடிக்கைகளால் வந்திருக்குமோ என்று மனம் ஒரு புறம் தவித்துக் கொண்டிருக்க… இப்போது… இந்த ரிதன்யா வேறு அபசகுனமாக பேசி வைக்கிறாள் என்று லட்சுமி முறைக்க…
ரிதன்யா ரிஷி-மகிளாவைப் பார்வை பார்த்தபடியே…
“அம்மா… முறைக்காதீங்க… இவன் இருக்கான்ல…. அவன் ஆளப் பார்க்கிறேனு… கண்ணாடியப் அட்ஜஸ்ட் பண்ணியே ரோட்டைக் கவனிக்க மாட்டான்மா.. அதைத்தான் சொன்னேன்… ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து இங்க வீட்டுக்கு வரும் போதே… நான் என் உயிரை எப்படி கைல பிடிச்சு வச்சுட்டு வந்தேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்” என்று ரிதன்யா முடிக்கவில்லை…
“ஏய்.. உன்னை” ரிஷி அவளைத் துரத்த ஆரம்பிக்க… மீண்டும் அண்ணன் தங்கை செல்லச் சண்டை ஆரம்பிக்க… லட்சுமிதான் அனைவரையும் அதட்டி எப்படியோ காரில் அமர வைத்தார்…
அதே நேரம் மகிளாவிடமும் பேச வேண்டிய வார்த்தைகளைப் பேசி சரிகட்டி அவளை தன் அருகில் வைத்துக் கொள்ள… ரிஷியின் அருகே முன் இருக்கைக்கு ரித்விகா வந்திருக்க… ரிதன்யாவின் அருகில் இருந்தாள் மகிளா இப்போது…
தன் அருகில் அமர்ந்திருந்த தன் ரிதன்யாவின் புறம் திரும்பிய மகிளா
“நீங்க குடிச்ச பால்ல தூக்க மாத்திரை போட்டுருக்கனும்…தப்பு பண்ணிட்டேன்…. அதிலும் இந்த வாலுக்கு 2 எக்ஸ்ட்ரா போட்ருக்கனும்” தோழியின் செவியில் கிசுகிசுத்தாள்
“ஆ… அடிப்பாவி… நீயெல்லாம் ஒரு ஃப்ரெண்டாடி…. லவ்வுக்காக என்னையே ஆப்போசிட் சைட்ல நிறுத்திட்ட” வழக்கம் போல ரிதன்யா மகிளாவிடம் பொய்க்கோபம் காட்ட
மீண்டும் அங்கு வழக்கமான சண்டை ஆரம்பித்து அதன் பின் ஒருவரை ஒருவர் வம்பிழுத்தும்… கிண்டல் செய்தும் பயணம் உற்சாகமாகவும்… இனிதாகவும் போய்க் கொண்டிருக்க… லட்சுமி இளையவர்கள் நால்வரையும்… அவர்களின் நெருக்கத்தையும் ஒரு புன்னகையோடேயே பார்த்துக் கொண்டிருந்தார்… மகிளா மட்டுமே தன் குடும்பத்துக்குள் ஐக்கியமாக முடியும் என்ற எண்ணத்தில் வந்த புன்னகை அது…
ரிதன்யாவுடனான நட்பாக இருக்கட்டும்… ரித்விகாவுடன் செல்லச் சண்டை போடுவதாக இருக்கட்டும்… தன் மேலும் தன் கணவன் மேலும் வைத்திருக்கும் பாசம் மரியாதை என மகிளாவின் இந்த எல்லா குணங்களுமே… தங்கள் வீட்டு மருமகளாக மகிளாவை மட்டுமே உணரவைத்திருந்தது லட்சுமிக்கு… இப்படியாக எண்ணிக் கொண்டிருந்த… வந்த லட்சுமியும் ஒரு கட்டத்தில் உறங்கி விட்டார்…
இப்படி வந்து கொண்டிருந்த போதுதான்… அந்த மோட்டல் சம்பவம்… அதன் பின் எல்லாம் மறந்து… எல்லாம் கடந்து … ரிஷியும் கலகலப்பாக வந்து கொண்டிருந்தான்… ரிஷி-மகிளா ஒரு அணியாகவும்… ரிதன்யா-ரித்விகா ஒரு அணியாகவும் பிரிந்து பாடல்கள் கண்டுபிடிக்கும் விளையாட்டை விளையாண்டு கொண்டிருந்தனர்…
இடையில் பாடல் வரிகள் சொல்ல… பாடலின் முதல் வரி கண்டுபிடிக்கும் விளையாட்டு அது… நால்வருமே ஒருவருக்கொருவர் சளைக்காமல் விளையாண்டனர்… இறுதியாக ரிஷி அணியும்… ரிதன்யா அணியும் ஒரே மதிப்பெண்ணில் இருக்க… விளையாட்டில் வென்று விடும் நோக்கில் ரித்விகா… வேகமாக ரிதன்யாவிடம்…
“ரிது… இந்த பாட்டைச் சொல்லு… அண்ணாக்கும் தெரியாது… மகிக்கும் தெரியாது” என்று ரிதன்யாவின் காதில் ஒரு வரியைச் சொல்ல… ரிதன்யாவுக்குமே அந்தப் பாடல் எது என்று தெரியவில்லை…
“என்ன சாங்… பாப்பா… எனக்குத் தெரியலையே….” என்று ரிதன்யா தன் தங்கையிடம் விழிக்க…
“ஷ்ஷ் நீ இதைச் சொல்லு…. எங்க ஸ்கூல்ல நாங்கள்ளாம் விளையாடும் போது இந்த மாதிரி சாங்க்தான் ட்ரம்ப்கார்ட்… நீ பாடு… என்று சொல்ல…. ரிதன்யாவும் பாடிக் காட்டினாள்…
“விடுமோ விடுமோ ஆசை…
வாரோதோ வளை ஓசை…”
ரித்விகா சொன்ன வரிகளைப் பாடி விட்டு…, தன் எதிர் அணியான ரிஷி-மகிளாவைப் பார்த்தாள் ரிதன்யா…
மகிளாவுக்குத் தெரியவில்லை அந்தப் பாடல் வரிகளின் முதல் வரி… கேள்வியாக ரிஷியை நோக்க… ரிஷியோ இப்போது காரின் வேகத்தைக் குறைத்து…. சாலையின் ஓரத்தில் காரையும் நிறுத்தி இருந்தான்…
பெண்கள் மூவரும் கேள்வியாக ரிஷியை நோக்க… ரிஷி திரும்பி அமர்ந்து தங்கைகள் இருவரையும் முறைத்துப் பார்த்தான்…
”ஹலோ…. பாட்டு தெரியலைனா… தெரியலைனு சொல்லனும்… அது என்ன டெரர் லுக்…” என்று ரித்விகா தங்களை முறைத்த தன் அண்ணனை வாற…
ரிதன்யா கொஞ்சம் குழம்பித்தான் போனாள்… தன் அண்ணனின் கோபப் பார்வையில்…
அதன் விளைவாக… மெதுவாக தன் தங்கையிடம் குனிந்து…
“பாப்பு… என்ன சாங் செல்லம் இது… அண்ணன் டெரர் லுக் விடறான்… “ என்ற போதே
“யாருக்குத் தெரியும்… ஃபர்ஸ்ட் லைன் தெரியும்… அவ்ளோதான்” என்று ரித்விகா அலட்சிய பாவனையுடன் தோளைக் குலுக்க… ரிதன்யாவுக்குத்தான் விழி பிதுங்கியது இப்போது
”உங்க ரெண்டு பேர்ல… யார் இந்த சாங் சூஸ் பண்ணினது” என்று ரிஷி அதட்டலாகக் கேட்க… அவனின் அதட்டலை எல்லாம் காதில் வாங்க வில்லை ரித்விகா… மாறாக பெருமையாக
“நான் தான்… நான் தான்” வேகமாகச் சொல்ல…
ரிஷிக்கு இப்போது கோபம் எல்லாம் போய் கவலை வந்திருந்தது தன் தங்கையை நினைத்து…
”ரித்வி… எங்கடா கேட்ப… இந்த சாங்க்லாம்…” சகோதரனாக நொந்து போய்க் கேட்க…
“அதெல்லாம் ஸ்கூல்லதான் அண்ணா… ஃப்ரெண்ட்ஸ் கூட விளையாட்றப்ப தெரிஞ்சுக்கிட்டேன்… ஏன் அவ்ளோ கஷ்டமா இருக்கா…” அண்ணனைத் தோற்கடித்து விட்டோம் என்ற துள்ளலில் மற்றும் பெருமையில் பேசிக் கொண்டிருக்க… ரிஷி தங்கையை முறைத்து பின் நொடியில் மாற்றிக் கொண்டவனாக… முன்னால் திரும்பி காரை எடுக்க ஆரம்பித்தான்
ரிதன்யாவுக்கும் மகிளாவுக்கும் புரிந்து விட்டது… அது ஏதோ ஒரு ஏடாகூடமான பாடல் என்பது… எனவே இருவரும் அமைதியாக இருக்க…. ரித்விகா விடவில்லை…
“மகி… சாங்க் சொல்லும்மா…” என்று மகிளாவிடம் போட்டிக்கு போக…
சாலையைப் பார்த்தபடி ஓட்ட ஆரம்பித்திருந்த ரிஷி… ரித்விகா கேட்டதற்கு பதிலாக
”ஒகே… எங்களுக்குத் தெரியலை… நீங்க வின் பண்ணதாவே ஒத்துக்கிறோம்” என்று கூறி ரிஷி விளையாட்டை முடித்து வைக்க…
“ஹலோ அது என்ன… ஒத்துக்கிறோம்னு…. என்னமோ வான்டடா ஜெயிக்க வைத்த மாதிரி பேசுற… பாட்டு தெரியலை…. அதை அக்செப்ட் பண்ணிக்கோ அண்ணா…” என்று ரித்விகா சொல்ல….
ரிஷி இப்போது மெல்லிய புன்னகையுடன்…
“சரி சாங்க் தெரியலை… நீங்க வின்… நான் லூசர் போதுமா…” என்று உடனடியாகக் கூற… ரித்விகாவும் சமாதானமாகி… அதன் பின் சிறிது நேரத்தில் தூங்கியும் விட…
ரிதன்யா-மகிளா-ரிஷி மூவர் மட்டுமே விழித்திருந்தனர்…
மகிளா தன் மணிக்கட்டைத் திருப்பி கடிகாரத்தைப் பார்க்க… நன்றாக விடிவதற்கு இன்னும் சில நிமிடத்துளிகளே இருக்க…. ரிதன்யாவிடம்…
“ரிது நீ தூங்கு…. நான் மாமாவுக்கு கம்பெனி கொடுக்கிறேன்…” இந்த வார்த்தைகளை மகிளா எந்த உள் நோக்கத்திலும் சொல்லாமல் சாதரணமாகத்தான் சொன்னாள்...
ஆனால் கேட்ட ரிதன்யாவோ…
‘உன் நல்ல எண்ணம் எனக்கு புரியுது தாயி…. நான் இந்த ட்ராவெல் முழுவதும்… தூங்காமலே வருகிறேன்னு சத்தியம் பண்ணிருக்கேன்” நக்கலாக மகிளாவிடம் சொல்ல…
ரிஷியோ தங்கையின் வார்த்தைகளில் தனக்குள் புன்னகைத்துக் கொண்டான் …
மகிக்கோ… ரிதன்யா சொன்ன வித்திலேயே அவள் தான் சொன்னதை தப்பாக எடுத்துக் கொண்டாள் என்பது புரிய….
”அடிப்பாவி…. உன்னை.... ” என்று சத்தமாய் மகிளா சொல்ல…
”யார்கிட்ட ரிது சத்தியம் பண்ணியிருக்கிறாய்…” ரிஷி இப்போது…. ரிதன்யாவிடம் சந்தேகம் போல் கேட்க...
“வேற யார்கிட்ட எனக்கு நானே சத்தியம் பண்ணியிருக்கிறேன்… நான் இருக்கிற வரைக்கும்… உன் சுண்டு விரலைக் கூட நீ… உன் பொண்டாட்டி மேல வைக்க முடியாது…” என்று அதிகாரமாய்ச் சொன்னபோது.... அவள் வார்த்தைகள் தந்த சந்தோஷத்தில் ரிஷி இப்போது வாய்விட்டு சத்தமாகவேச் சிரித்து விட்டான் ...
ரிஷிக்கு… மகி அவன் மனைவியாக வருவது சந்தோஷமோ இல்லையோ… ரிதன்யாவிற்கு… தன் தோழி தன் அண்ணியாக வருவது மிகவும் சந்தோசம்.... அதை இன்று வெளிப்படையாகச் சொல்லிக் காட்டிவிட்டாள்... ரிதன்யா அதோடு மட்டும் விட்டு விடவில்லை…
”ஞாபகம் வச்சுக்கோ அண்ணா… நான்தான் உனக்கும்… உன் பொண்டாட்டிக்கும் வில்லி” என்று நம்பியார் பாவனையில் கையை முறுக்கிச் சொன்னாள் வம்பிழுக்கும் பாணியில்
ரிஷி விடுவானா என்ன...
“பொண்டாட்டி மேலதான கை வைக்க முடியாது... என் காதலி மேல கை வைக்கலாம்ல...” என்று சொன்னவன்.... அதோடு நில்லாமல்
ரிதன்யாவின் கண் முன்னேயே மகிளாவின் தோள் மீதும் கை போட... தன்னவனின் அந்த உரிமையில்… மகி தன் தோழியைக் கண்களால் கேலி செய்ய.... ரிதன்யா பொய்க் கோபமாய் முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்வது போல் நடிக்க... புன்னகையில் ரிஷியின் இதழ்கள் இப்போது இன்னும் இன்னும் பெரியதாக விரிந்தது....
அந்த பாவனையோடேயே
“நீ வில்லியா ரிது… இந்த பேஸ்லாம் வில்லிக்கு செட் ஆகாது போ… அதுக்கு நீ இன்னும் வளரணும்க மேடம்…. ஹா ஹா… அதிலேயும் என்ன சொன்ன!!!… என்ன சொன்ன!!! எனக்கும் என் பொண்டாட்டிக்கும் நீ வில்லியா… அல்டிமேட் காமெடி… ரிதன்யா….“ என்று கலகலப்பாக தன் தங்கையை ரிஷி ஓட்டிக் கொண்டிருக்க…
மகிளாவோ ரிஷிக்கு ஒரு படி மேலே போய்…
“ரிஷி மாமா… நாம ரிதன்யாவுக்கு நமக்கு முன்னாலேயே மேரேஜை முடிச்சு அவளை வில்லன் கூட துரத்தி விட்றனும்…” என்ற போதே ரிஷி இன்னும் பெரிதாக சிரித்து வைக்க… மகிளாவும் அவனோடு இணைந்து கொண்டாள் அவன் சிரிப்பில்
அவர்கள் கிண்டலில்… இருவரையும் முறைத்தாள் ரிதன்யா
முறைத்த தன் தோழியிடம் மகிளா கண் சிமிட்ட… ரிஷி வேகமாகtஹ் தங்கையிடம்
“சாரி சாரி ரிதுமா… ஐ மீன்… உன் ஹீரோ கூட அனுப்பி வச்சுறனும்னு என் டார்லா சொல்றாடா செல்லம்… அப்டித்தானே மகி டார்லா” என்று ரிஷி மகிளாவிடம் கேட்க…
மகிளா அப்பாவி போல… தலையை மேலும் கீழுமாக ஆட்டி வைக்க…
“என் டார்லா பேச்சுக்கு நோ அப்பீல்… பண்ணிடலாம்” என்ற போதே… ரிஷியின் போனில் அழைப்பு வர… அவனது தந்தை தனசேகரிடமிருந்து தான் வந்திருந்தது…
போனை அட்டெண்ட் செய்ய…
“எங்க ரிஷி இருக்க…” அவரின் வார்த்தைகள் சுரத்தில்லாமல் ஒலித்ததா?… இல்லை அதில் அடக்கப்பட்ட கோபம் இருந்ததா?… உணர முடியவில்லை ரிஷிக்கு… ஆனால் இது தந்தை தன்னிடம் வழக்கமாக பேசும் குரல் இல்லை என்பதை மட்டும் ரிஷியால் நன்றாக உணர்ந்து கொள்ள முடிய
“டாட்.. எனிதிங் ஹேப்பண்ட்… உங்க குரல் சரியில்ல…. ஏன்”
கேள்வி கேட்ட தந்தையிடமே எதிர் கேள்வியை வைத்திருந்தான் ரிஷி…
ரிதன்யா,மகிளா இருவரும் ஒருவரை ஒருவர் புரியாத பாவனையோடும் கவலையோடும் பார்த்துக் கொள்ள…
”ஒண்ணுமில்லை… சார் எப்போ வருவீங்கனு தெரிஞ்சுக்கத்தான்…” தனசேகரனின் குரல் அலைபேசியில் ஒலிக்க… ரிஷியின் கண்கள் இடுங்கியது…
தந்தையின் குரல் மாறுபாடு தெள்ளத் தெளிவாக ரிஷிக்கு புரிய… அந்தப் புரிதலில் ரிஷியின் மௌனம் உடைபடாமல் இருக்க….
“மாமா… இன்னும் 1 ஹவர்ல அங்கு வந்துருவோம்…” மகிளா தன் மாமாவுக்குப் பதில் கூறினாள்…. வேகமாக ரிஷிக்கு பதிலாக
“உனக்கு இருக்கு… இங்க வா…” மகளின் குரல் கேட்டதும்…. நீலகண்டனின் குரல் இப்போது கோபத்துடன் இடையிட்டது… பின் அலைபேசிஅழைப்பும் முடிவுற்றிருந்தது
தந்தையின் கோப வார்த்தைகளைக் கேட்ட மகிளா விதிர்விதிர்த்துப் போய் ரிஷியைப் பார்க்க… ரிஷிக்கும் புரியவில்லை தான்…
”என்ன நடந்தது…. ஏன் தன் தந்தையின் குரலும் சரி இல்லை… வார்த்தையாடலும் சரி இல்லையே……. மகிளாவின் தந்தையும் கோபமாக இருக்கிறார்...”
யோசனை பாவத்தில் ரிஷியின் முகம் சுருங்கியிருக்க... கார் அவன் கரங்களில் வேகம் எடுத்திருக்க…
ரிஷிகேஷ் என்ற சாதாரண… கவலைகளற்ற… சந்தோஷமான… எதார்த்த இளைஞனின் வாழ்க்கையை…. மொத்தமுமாக… புரட்டிப்போடப் போகும்… சூறாவளிப் பயணமும்… அங்கிருந்து ஆரம்பித்திருந்தது….
கோவாவில் மையம் கொண்ட அந்த புயலின் தாக்கம் மெது மெதுவாக நகர்ந்து… மகிளாவின் தந்தை நீலகண்டனின் உருவில் தன் முதல் சேதாரத்தை ஆரம்பித்து இருந்தது ரிஷியின் வாழ்க்கையில்…
ரிஷி என்ற அவன் பெயருக்கு ஏற்றார் போல ரிஷியாக மாறிப் போகப் போகும் தருணங்களும் அடுத்தடுத்து நிகழ… அதே நேரம் கண்மணி ரிஷியின் கண்மணியாக மாறும் தருணங்களும் காத்துக்கொண்டிருக்க…
தனக்கான ஆசைகள் அனைத்தும் துறந்து… ரிஷியாக மாறி இருந்தனின் கரம் பற்றி கரை சேர்ப்பாளோ கண்மணி???!!!
ரிஷியின் கண்மணியாக மாறினாலும் அவன் கண்ணின் மணியாக மாறுவாளோ கண்மணி???!!!
இனி வரும் அத்தியாயங்களில்….
Please give your support and comments here…
It helps me to improve my writing and to correct my faults
Thanks
Praveena Vijay
Nice update. Family entertainment