ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...
இந்த அப்டேட் கிண்டில்ல புதிதாக சேர்க்கப்பட்ட பகுதி...
கிண்டில் இல்லாதவங்களுக்காக இங்க அப்டேட் பண்றேன்... ஒரு வாரம் மட்டுமே இருக்கும்..
பெருசாலாம் எக்ஸ்பெக்ட் பண்ண வேண்டாம்... ஜஸ்ட் ஜாலி அப்டேட்..
இப்படிக்கு
பிரவீணா விஜய்
---
அத்தியாயம் 66:
வெங்கட்டுக்காக காத்துக் கொண்டிருந்தான் ராகவ், ஷாஜகானின் காதல் கோட்டையில்…
ராகவ் வெங்கட்டை முதலில் அழைத்த போது… வெங்கட்டுக்கு கிடைத்த பதவி உயர்வினால் அவனால் உடனடியாக வர இயலாத சூழ்நிலை ஆகி விட.. இன்றுதான் வெங்கட்டுக்கு ஓய்வு கிடைக்க ராகவ்வுக்கு போன் செய்ய… ராகவ்வும் நண்பனைப் பார்க்க வந்து விட்டான்.
ராகவ்வை பொறுத்தவரை நண்பனாக வெங்கட்டை பார்க்க வந்திருக்கின்றான் என்பது இரண்டாம் பட்சமே… சந்தியாவுக்காக மட்டுமே வந்திருக்கின்றான் என்பதே உண்மை…
அவளைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே ராகவ்விடம்… சிவாவிடம் அவனால் இறங்கிப் பேச முடியாத சூழ்நிலை, வேறு வழியில்லை… வெங்கட் மட்டுமே இப்போதைய ஒரே வழி…
வெங்கட் இன்னும் வரவில்லை… ராகவ்வின் நினைவுகளில் மீண்டும் சந்தியாவே
சந்தியா அன்று இவனோடு பேசிய விதம் இன்றும் அவனை நிம்மதி கொடுக்கவில்லை… அடுத்த சில நிமிடங்களிலேயே அவள் அவனோடு சமாதானமாக பேசிய போதும்… ராகவ் மனம் ஏனோ சமாதானம் அடையவில்லை…
எண்ணங்களின் அலைப்புறுதல் பலவித யோசனைகள்… அவனையுமறியாமல்.. அவன் விரல்களை மீசைக்குக் கொண்டு போக… புதிதாக வளர்த்திருந்த மீசை… அவன் மனைவிக்காக மட்டுமே அவள் சொன்னதற்காக மட்டுமே… அவன் வளர்த்த மீசை…
நினைவுகள் அலைகழித்தன அவனை… விளைவு… சந்தியா டெல்லி கிளம்பிய தினத்திற்கு முன் தினம் அவளோடு அவன் இருந்த பொழுதின் நினைவுகளுக்கு எடுத்துச் சென்றது.
---
அன்று சந்தியா வீட்டில்… மாலை 6 மணி அளவில்…
“சந்தியா எழுந்திரு…”
“மாப்பிள்ளை கிளம்பி வெளில வந்துட்டாரு… நீ இன்னும் வரலையேன்னு பார்த்தா இன்னுமா தூங்கிட்டு இருக்க” என்றபடி வசந்தி எழுப்ப…
தாயின் குரலில் சட்டென்று எழுந்து அமர்ந்தவளுக்கு… தூக்க கலக்கத்திலும் அந்த அறையின் மாறுதல் கண்களில் படத்தான் செய்தது.
காரணம் அவள் அறை அத்தனை நேர்த்தியாக இருந்தது…கணவன்தான் காரணம் என்று நொடியில் புரிந்தது …
சுவர்க்கடிகாரத்தைப் பார்க்க… அது ஆறு என்று காண்பிக்க… அதற்கு மேல் அவள் சோம்பி இருப்பாளா என்ன… வேகமாக படுக்கையில் இருந்து எழுந்தபடி…
“அம்மா… அவர் வீட்டுக்கு கிளம்பிட்டாரா…” பரபரத்தாள் சந்தியா…
நாளை ஊருக்குத்தான் போகின்றாள்… ஆனாலும்… இன்றைய நிமிடங்களை வீணாக தூக்கத்தில் போக்கி விட்டாளே…
தன் கணவனைக் கேட்டபடியே கட்டிலில் இருந்து எழ… ராகவ்வும் இப்போது உள்ளே வந்திருந்தான்…
அவனைப் பார்த்ததுமே சந்தியா இன்னுமே பதறினாள்…
“ரகு.. கிளம்பிட்டீங்களா… என்னை முதல்லயே எழுப்பி இருக்க வேண்டியது தானே…” என்று சொன்னவளின் குரலில் ஏக்கம் மட்டுமே வழிந்தோட… அதோடு… இதோ இன்னும் சிறிது நேரத்தில் ரகு கிளம்பி விடுவானே என்ற கவலையும் கூட இருக்க… கலக்கத்துடன் கணவனைப் பார்த்தாள்.
இப்போது வசந்தி… வெளியேறி இருக்க… ராகவ்வும் சந்தியாவும் மட்டுமே
“சீக்கிரம் கிளம்பி வா… வெளில கிளம்பனும்..” என்றவனிடம்…
“நான் தான் வரமாட்டேன்னு சொன்னேனே” என்று அவன் சொன்னதை மறுதலித்துப் பேச ஆரம்பித்தவளின் உதட்டில் கைவைத்தான் ராகவ்
“ஷ்ஷ்ஷ்…. ரூமைப் பார்த்தியா பார்க்கலையா…நாளைக்கு டெல்லி போறதுக்காக நீ குப்பையா போட்டு வச்சுருந்த எல்லாம் எடுத்து வச்சு ஒழுங்கு படுத்தி உனக்கு பெருசா வேலை வைக்காம.. முடிச்சு வச்சுருக்கேன்.. எதுவும் பேசாமல் உடனே கிளம்பு…” என்றவன்…
”பத்து நிமிசம் டைம் தரேன்… அதோ அங்க நான் எடுத்து வச்சிருக்கிற… சாரிய எடுத்துக் கட்டிட்டு வெளில வர்ற… கார்ல வெயிட் பண்ணிட்டு இருக்கேன்…”
அவள் பதிலைக் கூட எதிர்பார்க்காமல்.. வேக வேகமாகச் சொல்லிவிட்டு… வெளியேறி விட்டான் ராகவ்…
---
தாங்கள் அமர்வதற்கு தோதான இடம் தேடி, ராகவ்வும்… சந்தியாவும் கடற்கரை மணலில் நடந்து வந்து கொண்டிருந்தனர்…
”அடிப்பாவி… எப்படி எப்படிலாம் போஸ் கொடுக்கிற மாடல் நான்… என்னை இப்படி மாத்திட்டியேடி” தன் நிலைமையைப் பார்த்து புலம்பியபடியே நடந்து வந்து கொண்டிருந்தவனைப் பார்த்த அவன் மனைவியோ… அவன் புலம்பலை எல்லாம் கண்டு கொள்ளாமல்… அவன் கைகளில் இருந்த பொட்டலங்களை எல்லாம் சரி பார்த்துக் கொண்டிருந்தாள்…
“அந்த மாங்கா சுண்டல்… அப்புறம்… கடலை…. அப்புறம்…” சுற்று முற்றி தேட ஆரம்பித்தவள்…
“கார்ன் வாங்கலையே…”
முறைத்தான் ராகவ்… அவன் முறைப்பைப் பார்த்தவள்,
“என்ன முறைக்கறீங்க…”
“நான் வரலேன்னுதானே சொன்னேன்… நீதானே ரகு கூட்டிட்டு வந்த…” முகத்தை தூக்கி வைத்தவளாக சந்தியா சொல்ல
“முறைக்கலடி… இதெல்லாம் சாப்பிட்டு முடி… அப்புறம் அதை வாங்கித் தரேன் செல்லம் போதுமா… நீ யார்னு தெரிஞ்சும் உன் கிட்ட முறைப்பேனா….. நீங்க சாப்பிடுங்க…” கொஞ்சம் கடுப்பும்… கொஞ்சம் கெஞ்சலுமாக ராகவ்வும் அவளிடம் இப்போது பேச ஆரம்பித்தான்.
கணவன் கெஞ்சலில் மிஞ்சாத மனைவியும் உண்டா… சந்தியாவும் அதற்கு விதி விலக்கா என்ன…
”இல்லை… நீங்க பொய் சொல்றீங்க… கோபமாத்தான் இருக்கீங்க “ என்று அவனோடு கோபித்தபடி அங்கிருந்த மணல் திட்டில் அமர…
“சகிம்மா… உன் மேல போய் நான் கோபப்படுவேனா..” என்று அவள் அருகில் உட்கார… அப்போதும் சந்தியா அவன் புறம் திரும்பாமல் கடலை பார்த்து வெறித்தபடி இருந்தாள்…
”ஹேய்… என்னைப் பாருடி..” இருந்த கொஞ்சம் நஞ்ச கடுப்பையும் தூக்கிப் போட்டவனாக… புதிதாக திருமணமான கணவனாக ராகவ் கெஞ்ச…
சந்தியாவோ… இன்னும் பிகு பண்ண ஆரம்பிக்க… அவள் கோபத்தை எப்படி மாற்றுவது என்று ராகவ்வுக்குத் தெரியவில்லை…சமாதானப்படுத்துவது எப்படி என்று என்றும் தெரியவில்லை…
“சகி… என்னடி இப்படி பிடிவாதம் பிடிக்கிற…” என்றபடி… சுற்றி முற்றிப் பார்க்க… அவர்கள் கண்ணுக்கெட்டிய தூரத்தில் பெரிதாக ஆள் அரவம் இல்லை…
இரவு ஏழு மணிக்கு மேலான இரவின் இருளும் அவனுக்கு கை கொடுக்க… அவளின் அருகில் நெருங்கி அமர்ந்தான் ராகவ்…
அவன் அருகாமையை கண்டு அவள் பயந்து அவனை விட்டு தள்ளி எல்லாம் நகரவில்லை… சொல்லப் போனால் அவனுக்கு வாகாக சந்தியாவும் அமர்ந்தாள்… ஆனாலும் அவன் புறம் திரும்பவில்லை… இன்னும் தான் கோபமாகத்தான் இருக்கின்றேன் என்பதைக் காட்டிக் கொண்டிருந்தாள்…
அவளையே பார்த்துக் கொண்டிருந்த ராகவ்… ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தவனாக
“ஏய்… ஏண்டி படுத்துற… நாளைக்கு ஊருக்கு போறடி நீ… உன்னைத் திரும்ப பார்க்கிற வரைக்கும் நான் தாங்குற மாதிரி ஏதாவது கொடுப்பேன்னு பார்த்தா…இப்படி உம்முனு இருக்க“ என்று சொன்னபடி அவளை உற்றுப் பார்க்க… அந்த முகத்தில் இப்போது கோபம் இல்லை… மாறாக அவள் கண்கள் பளபளத்திருக்க…
சந்தியாவுக்கு கோபம் இல்லை… நாளைய பிரிவின் துயரத்தில்… தன்னைப் பார்க்க முடியாமல் தவிக்கிறாள்… தவிர்க்கிறாள் என்று… இப்போது ராகவ்வுக்கும் புரிந்தது…
அவள் துக்கம் தாளாமல்… தன்னோடு அணைத்துக் கொண்டவனுக்கு எப்படி அவளைத் தேற்றுவது என்று தெரியவில்லை… இவனுக்குள்ளும் அதே வலிதானே….
அதே நேரம் ராகவ் அந்த வலியைக் காட்ட வில்லை… மாறாக…
“ஹ்ம்ம்.. நம்ம பொண்டாட்டிய ரொமாண்டிக்கா ஒரு பாட்டு பாடச் சொல்லி… அதை ஞாபகம் வச்சுட்டே நாள கடத்திரலாம்னு வந்தா…” பெருமூச்சு விட்டவனாக சொல்லி சந்தியாவைப் பார்க்க… அவளோ
”என் டேஸ்ட் தான் உங்களுக்குப் பிடிக்காதே… நீங்கள்ளாம், இந்த காக்கா வலிப்பு வந்த மாதிரி சாங்க்ஸ் கேட்கிற ஆளுங்க ஆச்சே…” நொடித்தவளின் குரலில் இன்னுமே கடினத்தன்மை வந்திருக்க…
சிரித்தவன்…
“ஹப்பா… பெரிய எரிமலையே உள்ள இருக்கும் போல… என் சகி மின்சாரப் பூவா மாறிட்டாளே… தொட்டா ஷாக்கடிக்கும் போல…” கேலிக் குரலில் சந்தியாவை கிண்டல் செய்தவன்…
“இதெல்லாம் உனக்கு செட் ஆகவே இல்லடி… உனக்கு அந்த குறும்புத்தனமான ஃபேஸ் தான் செட் ஆகும்”
அப்போதும் அவள் முகத்தை மாற்ற வில்லை…
“சகியே.. சகியே.. சகியே..” மெதுவான குரலில் ராகவ் பாடினான்… இல்லை முணு முணுத்தான் ராகவ்…. அவன் பாடகன் இல்லையே
”மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய் என் ஆசை ஓசை கேளாய்
மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய் என் ஆசை ஓசை கேளாய்
மாலையில் பொன் மார்பினில் நான் துயில் கொள்ள வேண்டும்
காலையில் உன் கண்களில் நான் வெயில் காயவேண்டும்”
சந்தியா ஆர்வமாக அவன் பாடுவதைக் இல்லையில்லை வாசிப்பதைக் கேட்க… ராகவ்… நிறுத்திவிட்டு… புருவம் உயர்த்தியவன்… மீண்டும் ஒரு முறை சுற்றுப்புறத்தைப் பார்த்துவிட்டு… கொஞ்சம் சத்தமாக
“சகியே... சகியே... சகியே...
என் மீசைக்கும் ஆசைக்கும் பூசைக்கும் நீ வேண்டும்”
அவன் முடிக்கவில்லை… சற்று முன் இருந்த இருந்த கலக்கமான முகமெல்லாம் மாறி…
சந்தியா கலகலவென சிரித்தாள்….
“ஹ்ம்ம்… பார்த்தியா பார்த்தியா… எல்லாரும் பாட்டு பாடினா கேட்டு ரசிப்பாங்க… நீ சிரிக்கிற…” சோகமாக ராகவ் சொல்ல…
அவன் சகியோ..
“ரகு… நீ பாட்றதை பார்த்தோ இல்லை கேட்டோ சிரிக்கலை…
” என் மீசைக்கும் ஆசைக்கும் பூசைக்கும் நீ வேண்டும்”
”ஆசை பூசை… அதெல்லாம் உன் சகிக்கு ஓகே… ஆனா… அந்த மீசை… அங்கதான் இடிச்சது… நெனச்சேன் சிரிச்சேன்…”
”ஓ அது வேற இருக்கோ… மீசையை எடுத்துருவோம்…” ராகவ்வோ பட்டென்று சொல்ல..
அவன் சொன்ன அடுத்த நிமிடமே சந்தியாவுக்கு முகம் மாறி விட…
“இப்போ என்னடி ஆச்சு”
“ரகு உனக்கு ஒண்ணு தெரியுமா…” பெரிய துக்கத்தை சுமந்தவள் போல அவனை நோக்க…
“சொல்லு சொன்னாத்தானே தெரியும்…” சொன்னவனுக்குள்ளோ இன்று முழுவதும் இவளை சமாதானப்படுத்துவதிலேயே நேரம் போய் விடும் போல என்றே தோன்றியது…
“ப்ச்ச்… திட்டவெல்லாம் கூடாது… ஹான் திட்டவும் உங்களுக்கு ரைட்ஸ் கிடையாது… சார்லாம் அப்போவே லவ் ப்ரப்போசல் பண்ண ஆளு…”
கேட்ட ராகவ்வுக்கு பல்லைக் கடிக்க மட்டுமே முடிந்தது
“சரி சரி.. நான் சொல்றேன்… கோபப்படாதீங்க… ”
“ஆக்சுவலா நான் செமையா சைட் அடிப்பேன் ரகு… ஆனால்… நான் சைட் அடிக்கிற பையனுக்கு இருக்க வேண்டிய ஃபர்ஸ்ட் குவாலிட்டி என்ன தெரியுமா… மீசை இருக்கனும்… இல்லைனா அவன் எவ்ளோ பெரிய அழகனா இருந்தாலும் பார்க்கக் கூட மாட்டேன் தெரியுமா… அப்படிப்பட்ட எனக்கு இப்படி மீசையில்லாத ஒரு ஆளு புருசனா வருவான்னு தெரியாம போச்சே”
சத்தமாக புலம்பியவளிடம்… ராகவோ இன்னும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல சொல்ல ஆரம்பித்தான்
“புலம்பிட்டே இரு… அந்த மீசை ஆசை எல்லாம் உன் சைட்டுங்க கிட்ட மட்டும் வச்சுக்க” ராகவ் உண்மையிலேயே கறாரானத் தொணியில் தான் சொன்னான்… அவனுக்கு மீசை பிடிக்காது… அப்படியே பழக்கமாகவும் போய் விட்டது… மீசை வைத்த ராகவ்வா.. அப்படி அவனை நினைத்துப் பார்ப்பதே அவனுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை…
கணவனின் முக மாறுதலில் சந்தியாவும் அதற்கு மேல் அவனிடம் அதைப் பற்றி பேச வில்லை… விட்டு விட்டாள்…
அதன் பிறகு பேச்சு திசை மாற… பேசியபடியே… வாங்கி வைத்திருந்த எல்லாவற்றையும் சாப்பிட்டு முடித்தவள்…
“ரகு… ரகு… நாம ஒரு கேம் விளையாடலாமா”.. திடீரென… கேட்டாள்.
“சகிம்மா… உன் விளையாட்டுத்தனத்துக்கு ஒரு அளவில்லையா…”
“ப்ச்ச்… ரகு… எழுந்திருங்க “ என்று தானும் எழுந்தபடி ராகவ்வையும் கைப்பிடித்து எழுப்பி விட்டவள்…
கடலை நோக்கி அவனை இழுத்துக் கொண்டு நடந்தவள்… கடல் அலைகள் பாதத்தைத் தழுவும் இடத்தில் நின்று கொண்டு
”உங்களுக்கு ஒரு கேம்… இதுல நீங்க ஜெயிச்சுட்டீங்கன்னா… நீங்க என்ன கேட்டாலும் நான் தருவேன்… அதே மாதிரி நீங்க தோத்துட்டா நான் என்ன கேட்டாலும் நீங்க தரனும்”
யோசனையோடு அவளைப் பார்த்தவனிடம்…
“என்ன வேண்டும்னாலும் கேட்கலாம்… இப்போ நான் கேட்டேனே அது மாதிரி கூட… ” என்றாள்… அதாவது மீசை வைக்கச் சொன்னதை சொல்லாமல் சொன்னாள்..
“அதுக்காக… நீங்க என் ஹேர்லாம் கட் பண்ணிட்டு… உங்க மாடல்ஸ் மாதிரி அல்ட்ரா மாடர்ன் கேர்ளா ஆகணும்லாம் கேட்க கூடாது… அப்புறம் “ என்று ஆரம்பித்தவளிடம்
“இவதான் என் சகி…. இவள நான் எப்போதுமே மாறச் சொல்ல மாட்டேன்… நீ எப்போதுமே இப்படித்தான் இருக்கனும்… அன்னைக்கு உங்க ஆஃபிஸ் மக்கள் சொன்னங்களே.. சந்தியான்னா புடவை… நீள கூந்தல்.. அது உன் ட்ரேட் மார்க் அதை நான் ஏன் மாத்தச் சொல்லப் போகிறேன்” என்றவனிடம்… காதலோடு கசிந்துருகி சந்தியா அவனைப் பார்க்க ஆரம்பிக்க…
“ஹ்ம்க்கும்… கேம்னு ஏதோ சொன்ன மாதிரி இருந்துச்சே சந்தியா … “ அவளை மாற்ற….
சந்தியாவும் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பினாள்…
”சிம்பிள் கேம் தான்… ரகு… நான் இன்னைக்கு சாரி கட்டிட்டு வந்துருக்கேன்ல… இந்த கடல் அலைனால என் மேல ஒரு ஒரு பொட்டு ஈரம் கூட படாம என்னை காப்பாத்துங்க பார்ப்போம்…”
“இதெல்லாம் ஒரு கேமாடி… “ இவன் எரிச்சலோடு கேட்க
“ஹலோ… இது கூட முடியாதா… “ என்றவள்
”ஒரு புருசனா… ஒரு சொட்டு ஈரம் படமா காப்பாத்த முடியாத நீங்க… நாளைக்கு எனக்கு ஒரு ஆபத்துன்னா… எப்படி காப்பாத் … “ ராகமாக இழுத்தவள்…. அப்படியே நிறுத்தினாள்…
காரணம்…
ராகவ்வின் கரம் அவள் இடையைச் சுற்றி வளைத்ததோடு அல்லாமல்… அவளை ஒரு கரத்தாலே தன்னோடு அணைத்து அவளைத் தூக்கி இருக்க…
பார்வையாலேயே காட்டினான்…
“ஃபர்ஸ்ட் அலை வந்துருச்சு… செக் பண்ணிக்கோ… உன் சேலையில ஈரம் பட்ருக்கா”
கிசுகிசுப்பாக அவளை இறக்கி விடாமலேயே சொல்ல… சந்தியாவுக்கு இப்போது காற்று தான் அவள் குரல் வளையில் இருந்து வர… அதே நேரம் அடுத்த கடல் அலையும் காத்திருக்காமல் வந்து சேர… இம்முறை சற்று உயரத்தில் வந்தது…
ராகவ் அவளை இரு கரங்களிலும் ஏந்தி தூக்கி இருக்க…
“ரெண்டாவது அலை….”
”இன்னும் எத்தனை மேடம்…”
விரல்களால் மட்டுமே காண்பித்தாள்… ”மூன்று”
“மூன்று முறை” என்று சந்தியா சொல்கிறாள்…புரிந்ததுதான் ராகவ்வுக்கு… இருந்தும்
“இன்னும் மூணு தடவையா…” சிரிப்பை அடக்கியபடியே சில்மிஷமாக அவளிடம் ராகவ் கேட்டான்…
”இல்லல்ல… இதுதான் லாஸ்ட்…” வேக வேகமாக சந்தியாவிடமிருந்து வார்த்தைகள் வர… அதே நேரம்…. இப்போது பெரிய அலையும் வர… பார்த்தவன் வேகமாக அவளைத் தூக்கியபடியே… திரும்பிக் கொள்ள… மொத்த அலையும் அவன் முதுகை ஈரமாக்கி விட்டு போக…
“இப்போ என் சகிக்கு நம்பிக்கை வந்துருச்சா” இறக்கி விட்டவனிடம்…
“இந்த ட்ரிப்பிள் ஆர்… ஆர் ஃபார் ரொமான்ஸ் மட்டும் இல்லை ஆர் ஃபார் ரெஸ்க்யூவும் பண்ணுவேன்னு நம்புறீங்களா மேடம்…”
தன் கணவனிடம் தனக்கு இருக்கும் ஓட்டு மொத்த நம்பிக்கையையும் அவனிடம் காட்டும் விதமாக, பெரிதாக தலை ஆட்டியவள்…
“சரி ஓகே… வின் பண்ணிட்டீங்க கேளுங்க கேளுங்க… நான் என்ன செய்யனும்…” ராகவ்விடம் கேட்க… அவனுக்கோ எதுவுமே கேட்கத் தோன்றவில்லை…
அதன் காரணமாக… ராகவ் யோசித்துக் கொண்டே இருக்க…
” 10… 9… 8…” சந்தியா எண்ண ஆரம்பித்திருந்தாள் இப்போது
“இது எதுக்குடி…” பதறியவனாக கேட்க…
”கவுண்ட் டவுன்… ரகு… அதுக்குள்ள நீ கேட்கனும்”
“இதெல்லாம் போங்காட்டம் டி… யோசிக்க டைம் கொடு ..அப்டிலாம் எனக்கு உடனே சொல்ல முடியாது” என்ற போதே…
”ஓ…” என்று யோசித்தவள்…
“சரி விடுங்க… புருசனுக்கு ஒரு விசயம் முடியலைனா… வைஃப் தானே காப்பாத்தனும்… உங்களுக்காக நானே கேட்டுக்கிறேன்” கூலாகச் சொல்லி முடிக்க…
“என்னது… அடிப்பாவி…. நீ கேட்கறியா…” என்றவன்
“உனக்கும் எனக்கும் தாண்டி போட்டி…” அப்பாவியாகச் சொன்னவனிடம் சந்தியாவோ…
“நான் யாரு…” சந்தியா கேள்வி கேட்க
“சந்தியா…” ராகவ் சொல்லி முடிக்க வில்லை…
“நோ… சந்தியா ராகவ ரகு ராம்… உங்க சகி…. உங்கள்ள சரி பாதி… சந்தோசமோ துக்கமோ… ரெண்டு பேருக்குமே சரி பாதி… அப்போ நீங்க ஜெயிச்சா நான் ஜெயிச்ச மாதிரிதானே… ஹென்ஸ் ப்ரூவ்ட்… LHS=RHS … ”
“முடியலடி… உன் மேத்ஸ் ஈக்குவெஷன்லாம்”
“யெஸ்… சோ என் ஹஸ்பெண்ட் ஜெயிச்சதுனால… நான் அவருக்கு பதிலா கேட்கலாம்”
“சோ நீ ஒரு முடிவோடத்தான் இந்த கேம் ஸ்டார்ட் பண்ணியிருக்க….. கேளு”
“பெருசாலாம் இல்லை… ”
”உன் மீசைக்கும் ஆசைக்கும் பூசைக்கும் நான் வேண்டும்”
மின்சார கண்ணா மின்சார கண்ணா
பாடி முடித்தவள்… முகத்தை பாவமாக வைத்தபடி…
“எனக்காக ரகு… ஒரே ஒரு தடவை… ப்ளீஸ் ரகு” கெஞ்சலாகச் சொன்னவளிடம்
சிரித்த ராகவ்…
“எப்டிடி இந்த முகத்தை இப்படி ஒரே நொடில மாத்துற… “ அவளை ரசித்தபடியே சொன்னவன்….
“சரி” என்று ராகவ் தலை ஆட்ட…
“மீசைக்கு ஒகேவா…” சந்தியா நம்ப முடியாத தொணியில் கேட்க…
ராகவ் இன்னும் வேகமாக தலையை ஆட்டினான் ஆமோதிப்பாக..
“அப்போ நாளையில் இருந்தே… நீங்க வளர்க்கனும்…” சட்டென்று அவள் குரல் அவனிடம் கெஞ்சலுடம் கூடிய ஆணையுடன் மாற….
அவன் பதில் சொல்வதற்குள்…
“யார் மாதிரி வச்சா நல்லா இருக்கும்” சொன்னபடியே யோசிக்க ஆரம்பித்தவளிடம்…
“நான் மீசை வைக்கிறேன்னு சொன்னதே அதிகம்… நீ இவ்ளோ கண்டிஷன் போட்டா” என்ற போதே
“ஓகே…ஓகே… உங்க இஷ்டம்… “ என்று இறங்கி வந்தவளை பார்த்தவன்,..
”அப்போ யோசிக்கும் போது தோணலை… ஆனால் இப்போ உன்கிட்ட ஒண்ணு கேட்கணும்னு தோணுது சந்தியா…” அவன் குரலில் வலியுடன் கூடிய தீவிரம் இருக்க…
சந்தியா அவனை குழப்பமாகப் பார்த்தாள்…
“இனிமேல.. காதம்பரி… அன்னைக்கு நடந்த இன்சிடெண்ட் அதப் பற்றி என்கிட்ட நீ எப்போதுமே பேசவே கூடாது…” தன் கையை அவளிடம் நீட்ட…
என்னதான் தான் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு பேசினாலும்… அவனால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை…. சந்தியாவுக்கு அவன் உணர்வுகளின் வலி புரிந்தது…
“ரகு சாரி… நீ இந்த அளவுக்கு” என்று ஆரம்பிக்க… அவளை வேறு ஏதும் பேசவிடாமல்
”ப்ராமிஸ்” என்று அவன் அழுத்திச் சொல்ல…
அவன் கரங்களில் அவள் கரம் சேர்ந்தது
----
அன்று தன்னவளோடு சேர்ந்திருந்த கரமோ… இன்று தனித்திருந்தது…
தனித்திருந்த தன் கரத்தை இப்போது பார்த்தான் ராகவ்… பார்த்தபடியே இருந்தான்…
சந்தியாவின் கரங்களின் மென்மையை அவன் உள்ளம் இப்போதும் உணர்ந்து கொண்டிருக்க… அந்த உணர்வில் அப்படியே மூழ்கி விட்டிருக்க….
அப்போது…
”மச்சான்….” என்றபடி அவன் உள்ளங்கையில் அடி விழ நிமிர்ந்து பார்த்தான் ராகவ்… அங்கோ அவன் முன் புன்னகையுடன் வெங்கட் …. நின்று கொண்டிருந்தான்..
------
Nice scenario jii.. Y u did so jii.. U would include this too.. Always njoying ur creations... Kudos jii..for uploaded here..